எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இன்று (23) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைக் கூட்டத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான பிரேரணையை முன்வைத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு சமகி ஜனபலவேகய கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.