வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து எந்த ஒரு மோசமான நிலைமையும் ஏற்படவில்லை என பஃவ்ரல் (Paffrel) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று 35 சிறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மொத்தத்தில் அமைதியான சூழல் நிலவுவதாக பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.