Site icon Newshub Tamil

பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, வரி வருமானம் அதிகரித்து வருகிறது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – அனுரகுமார திஸாநாயக்க

ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வரி வருமானம் அதிகரித்து வருவதை தான் ஏற்றுக்கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய வரி விதிப்பினால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது அல்ல, ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததால் வரி செலுத்த வேண்டிய மக்கள் வரி வலையில் சிக்கியுள்ளனர் என்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் விளைவாக 550 பில்லியன் ரூபாவை எட்டப்பட்டுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சி மற்றும் வினைத்திறன் காரணமாக பொருளாதார இலக்குகள் எட்டப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.

Exit mobile version