Site icon Newshub Tamil

நீர்வளத்துறையை சீர்திருத்த 100 மில்லியன் டொலர் கடனுதவி – ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜீவன்

இலங்கையின் நீர்த்துறையை சீர்திருத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் கொள்கைகளின் அடிப்படையில் 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையின் நீர் வளங்களை மாற்றியமைக்கவும் நீர் உட்கட்டமைப்பில் உள்ள பலவீனங்களை கண்டறியவும் இந்த தொகை பயன்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் 100 மில்லியன் டொலர்கள் மூலம் தேவையான சீர்திருத்தங்களை துரிதப்படுத்த முடியும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

 

தான் அமைச்சராக இருந்த போது நீர்வளத்துறையில் மாற்றியமைக்கும் சில சீர்திருத்தங்களை ஆரம்பித்து வழங்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்மீது வைத்த நம்பிக்கையின்றி இது சாத்தியமாகியிருக்காது. .

Exit mobile version