Site icon Newshub Tamil

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் வௌியிடப்பட்டது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற கொள்கைப் பிரகடன சற்று முன்னர் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது.

“தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025இற்கு அப்பால் செல்லும் செயல்முறை, ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி.., வெற்றிபெறும் தாய்நாடு , ஒன்றிணைந்த இலங்கை” ஆகிய 05 பிரதான கூறுகளை இந்த தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளடக்கியுள்ளது.

இயலும் ஸ்ரீலங்கா என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்தக் கொள்கை அறிக்கையில் நாட்டை திவாலான நிலையில் இருந்து மீட்பதற்கான பொருளாதார மறுசீரமமைப்பு தொடர்பான அடிப்படை நடைமுறைகளும் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்புவது இயலும் ஸ்ரீலங்காவின் கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த நாடு படிப்படியாக மீட்சியடைந்ததன் பின்னர் மேலும் ஒரு அடியை எடுத்து வைப்பது தொடர்பாகவும் ஜனாதிபதி வேட்பாளா் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

https://www.ranil2024.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டார்.

Exit mobile version