Site icon Newshub Tamil

சமூக ஊடகங்களில் நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தல் கருத்துக் கணிப்புகளை நிறுத்த நடவடிக்கை

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி இந்த வாரம் தேர்தல் ஆணையத்தில் இது குறித்து விவாதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த கருத்துக்கணிப்புகளால் சில வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கருத்துக்கணிப்புகளை யார் நடத்தியது என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆரய்ந்து வருகிறது எனவும் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வின் தகவல்கள் பெறப்பட்டு, இந்த கருத்துக் கணிப்புகளை நிறுத்தும் முறை குறித்து ஆணைக்குழுவில் விவாதிக்கப்படும் என்றும் தலைவர் கூறினார்.

இலத்திரனியல் அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது இலகுவானது எனினும், சமூக வலைதளங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது இலகுவானதல்ல, ஆனால் இது தொடர்பில் விரைவான வழிமுறை தேவை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version