Site icon Newshub Tamil

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் கம்பளை தொகுதி அமைப்பாளருமான அனுஷ விமலவீர தீர்மானித்துள்ளார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன மற்றும் கம்பளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளர் சமந்த அருண குமார ஆகியோரைச் சந்தித்து தமது தீர்மானத்தை அனுஷ விமலவீர அறிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என்பதாலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக
அனுஷ விமலவீர தெரிவித்தார்.

 

Exit mobile version