Site icon Newshub Tamil

தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் இன்று

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் விரைந்து விண்ணப்பங்களை செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்காதவர்கள் நள்ளிரவுக்கு முன்னதாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதளமான https://www.elections.gov.lk க்குச் சென்று பார்வையிடவும்

எவ்வாறாயினும், தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல்வேறு தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

தபால் வாக்குகளை ஏற்றுக்கொள்வது இன்றுடன் முடிவடையும் எனவும், எக்காரணம் கொண்டும் அது நீடிக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version