எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஜாதகத்தில் எவ்வளவு ராஜயோகம் இருந்தாலும் பயனில்லை திஸ்ஸ அத்தநாயக்க அவர்களுடன் இருக்கும் வரை அந்த ராஜயோகங்கள் பலிக்காது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாசவைச் சுற்றி ஒரு பழைய ஐக்கிய தேசியக் கட்சியொன்று இருந்ததாகவும், நவீன உலகிற்கு ஏற்றதாக நினைக்கும் புதிய குழுக்கள் அவருடன் இல்லை எனவும், பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் அவர் ஆற்றும் உரைகளினால் அது சாத்தியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரால் ஏதாவது செய்ய முடியுமா இல்லையா என்பதைப் இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.