எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானத்தில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.