Site icon Newshub Tamil

அனைவருக்கும் ஆங்கிலம் கற்பிப்பதை ஜே.வி.பி எதிர்த்தது – ஜனாதிபதி

கல்வி வெள்ளை பத்திரத்தின் மூலம் அனைவருக்கும் ஆங்கிலம் கற்பிக்க திட்டமிட்டிருந்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்த மக்கள் விடுதலை முன்னணி அனுமதிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் ஊடாக நேற்று (26) இளைஞர் சமூகம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு கல்வியில் மாற்றம் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“1971 இல் கல்வி சீர்திருத்தத்தின் மூலம் பாடசாலை கல்வி இரண்டு வருடங்கள் குறைக்கப்பட்டது. கல்வி முறை மாற்றப்பட்டது. தேசிய கல்வியில் அனைவருக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது.

மேலும், இதுபோன்ற வேறு சில திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போனது. ரோஹன விஜேவீர மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆங்கிலம் கற்பிப்பதை எதிர்த்தனர். அன்று அனைவருக்கும் ஆங்கிலம் கற்பித்தால் இன்றைய நிலை என்னவாக இருக்கும்

இந்த நாட்டில் கல்வி வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் கல்வி முறையை மாற்ற வேண்டிய பல இடங்கள் உள்ளன எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

Exit mobile version