உலக செல்வந்தரான எலன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை ஆரம்பிப்பதற்காகவே அவர் வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இணைய வசதிகளை இலங்கையில் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதுடன் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை எலன் மஸ்க் எதிர்வரும் ஒகஸ்ட் மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
Starlink நடவடிக்கைகளுக்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தற்போது விரைவாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.