தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அரச திட்ட நிதியம் ஒன்று நிறுவப்படும் எனவும் அதற்காக யார் வேண்டுமானாலும் பணத்தை முதலீடு செய்யலாம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த நிதியததிவ் கறுப்பு பணத்தைக் கூட முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ள அவர், அந்த பணம் எப்படி சம்பாதித்தது என்பதை கண்டறிய தம் கட்சிக்கு நேரமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“எங்கள் நிர்வாகத்தில் அரச திட்ட நிதியம் தொடங்குவோம் என்று நம்புகிறோம். இந்த அமைப்பிற்குள், பொருளாதார செயல்முறைக்கு சட்டப்பூர்வமாக பங்களிக்காத மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்காத நபர்களால் சம்பாதித்த பணம் இந்த திட்டத்திற்குள் உள்ளது.. அவை கறுப்பு பணமாக கூட இருக்கலாம். ஆனால் நாம் திறக்கும் அரச திட்ட நிதியமானது இலங்கையில் எவருக்கும் முதலீடு செய்யும் திறனை வழங்குகிறது. அவர்களுக்கு அந்த பணம் எப்படி கிடைத்தது என்பதை அறிய எங்களுக்கு நேரமில்லை என்றும் அவர் தெரிவிதுள்ளார்.