Site icon Newshub Tamil

அரசாங்கத்தின் மீதான மக்களின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரிப்பு – ஆய்வு அறிக்கை

தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக “வெரிட்டி ரிசர்ச்” நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் நடத்திய நாடளாவிய ரீதியான கருத்துக் கணிப்பின் ஜூலை மாத அறிக்கையின்படி, கடந்த பெப்ரவரி மாதத்தை விட அரசின் மீதான மக்களின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 7 வீதமாக இருந்த தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் மதிப்பு இம்மாதம் 24 வீதமாக அதிகரித்துள்ளது.

கணக்கெடுப்பின்படி, தற்போதைய பொருளாதார நிலைமை நன்றாகவோ அல்லது சிறப்பாகவோ இருப்பதாக 28 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக 30 சதவீதம் பேர் கூறியதாக “வெரிட்டி ரிசர்ச்” நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், ஜூலை மாதத்தில் 85,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த ஜூலை 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,426 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு 1,095,675 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் அதிகமானோர் இந்தியாவிலிருந்து வந்துள்ள நிலையில் அதன் எண்ணிக்கை 207,966 ஆகும்.

ரஷ்யாவிலிருந்து 116,019 சுற்றுலாப் பயணிகளும், பிரிட்டனில் இருந்து 97,055 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

இது தவிர, ஜேர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version