Site icon Newshub Tamil

இன்று முதல் மாவட்ட மட்டத்தில் ஆரம்பமாகும் ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்

உயர் தரம் மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை இன்று முதல் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இன்று முதல் ஜூலை 15 ஆம் திகதி வரையும் பதுளை, மாத்தளை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் 13 ஆம் திகதியும் கிளிநொச்சி மாவட்டத்தில் 14 ஆம் திகதியும் வழங்கப்படவுள்ளது.

அத்தோடு, கம்பஹா மாவட்டத்தில் ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளிலும், காலி மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளிலும், வவுனியா, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், களுத்துறை, மன்னார், அம்பாறை, குருநாகல், கண்டி மாவட்டங்களில் ஜூலை 17 ஆம் திகதியும் வழங்கப்படவுள்ளது.

மேலும், முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஜூலை 18 ஆம் திகதியும் மொணராகலை, மாத்தறை மாவட்டங்களில் ஜூலை 19ஆம் திகதியும், புத்தளம் மாவட்டத்தில் ஜூலை 22 ஆம் திகதியும் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உயர் தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபா வீதம், 24 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதன்போது ஒரு கல்வி வலயத்தில் இருந்து 60 மாணவர்கள் வீதம் தெரிவுசெய்யப்படுவார்கள்.

மேலும், புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் புலமைப்பரிசில்களைப் பெற விண்ணப்பித்து அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version