ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பொருளாதார முயற்சிகள் மற்றும் நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் அதுல கல்கட்டிய தெரிவித்தார்.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுமார் 8,50, 000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆண்டு இறுதிக்குள் சுமார் 10 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது என அதுல கல்கட்டிய தெரிவித்துள்ளார்.