Site icon Newshub Tamil

திருடர்களை பிடித்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது – திலித் ஜயவீர

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர், தொழிலதிபர் திலித் ஜயவீர, இலங்கையில் மிகப்பெரிய தீர்க்கமான அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.

மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்கும் தொழில் முனைவோர் அரசை கட்டியெழுப்பும் நோக்கில் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக பல மாவட்ட மாநாடுகளை நடத்தி வந்த நிலையில் இந்த மாநாட்டுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

திருடர்களைப் பிடி என்ற முழக்கங்களில் இருந்து வெளிவர வேண்டும் என்றும், இந்த நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதற்கும், நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஊழல் என்ற கொடிய சுழலில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த திலித் ஜயவீர, திருடர்களைப் பிடித்து கடத்தல் பொருட்களைக் கண்டுபிடித்து இந்த நாட்டைக் காப்பாற்ற முடியாது என்பது பொய்யான கதையாகும்.

“நான் அரசியலுக்கு வர இருந்தவன் அல்ல. ஆனால் அரசியல் நடப்புகளை நம்பி பல்வேறு நபர்களை ஆதரித்தோம். தயக்கத்துடன், ஆனால் விருப்பத்துடன், உங்களுக்காக, நாட்டிற்காக, இந்த நாட்டின் வருங்கால சந்ததியினருக்காக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறேன். இதற்கு முன் நாங்கள் யாரை ஆதரித்தாலும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான். அது வேறொன்றுமில்லை. ஒரு நாள் இந்த அன்பான இலங்கையை கட்டி எழுப்பி வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை.

ஆனால் இலங்கையில் தீர்க்கமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மௌபிம ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் இளம் பிரிவினருடன் நாங்கள் இப்போது இணைந்து பணியாற்றி வருகிறோம்.

மேலும் திருடர்களைப் பிடிப்பது என்ற கோஷங்களில் இருந்து வெளியேறுங்கள். இந்த நாட்டை ஊழலில் இருந்து விடுவிக்க வேண்டுமானால், இந்த மோசமான ஊழலில் இருந்து வெளியே வர வேண்டுமானால், மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் தேசமாக நாம் உத்வேகத்துடன் அதை எதிர்கொள்ள வேண்டும். திருடர்களை ஒருவர் பின் ஒருவராக பிடித்து திருடர்களை பிடித்து கடத்தல் பொருட்களை கண்டுபிடித்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இது ஒரு பொய்யான கதை” என கூறினார்.

Exit mobile version