Site icon Newshub Tamil

புத்துருவகல மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொனராகலை புத்தருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளார்.

கடந்த நவம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக மொனராகலை புத்தருகல மகா வித்தியாலய மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது மாணவர்களால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

தங்கள் பள்ளிக்கு திடீரென வந்தவரை நாட்டின் ஜனாதிபதியாக அங்கீகரித்த போது மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அதன்போது ஹெலிகொப்டருக்கு அருகில் வந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. பாடசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து ஜனாதிபதி அவர்களிடம் கேட்டறிந்தார்.

பாடசாலையில் இசைக்கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். அதேவேளை, கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதனை விரைவில் கையாளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அதன்படி, மிகக் குறுகிய காலத்தில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றி, ட்ரம்பெட், டிராம்போன், சாக்ஸபோன், கிளாரினெட், மவுண்டபிள் டம்ளரைன், சைம் செட், அக்யூஸ்டிக் டிரம் போன்ற பல இசைக்கருவிகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version