கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 608,489 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த மாதத்தில், 84,003 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்.
மேலும் ரஷ்யா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, சீனா போன்ற நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அக்காலப்பகுதியில் நாட்டிற்கு வந்துள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த வருடத்தில் 719,978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.