Site icon Newshub Tamil

துணைவேந்தர்களின் கோரிக்கைக்கு அமைய பல்கலைக்கழகங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனிப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர் விடுதிகளுக்கு அருகில் பாதுகாப்பை மேலும் அதிகரிக்குமாறு துணைவேந்தர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்கலைக்கழகங்களுக்கு அருகாமையில் இரவு நேர ரோந்து பணியை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், இந்தப் பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் குழுவை அமைச்சுக்கு அழைத்திருந்தார். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அங்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட விரிவுரையாளர் எச்.டி.கருணாரத்ன குறிப்பாக மாணவர் விடுதிகளுக்கு அருகாமையில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். பல்கலைக்கழக வளாகங்களில் திருட்டுகள் அதிகரித்துள்ளதாகவும் துணைவேந்தர், பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக அமைச்சர் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் ரோந்து பணியை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார். பல்கலைக்கழகங்களில் திருட்டை தடுக்க பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் விரிவுரையாளர் உபுல் சுபசிங்க உள்ளிட்ட விரிவுரையாளர்கள் குழுவையும் சந்தித்த அமைச்சர், மாணவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். ஜயவர்தனபுர மாணவிகள் தங்கும் விடுதிகளுக்கு அருகாமையில் பாதுகாப்பை அதிகரிக்குமாறும் உபவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் முன்பை விட கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. நிலாந்தி டி சில்வா மற்றும் பேராசிரியர்கள் குழுவினர் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸைச் சந்தித்துப் பேசியதுடன், பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் திரு. திரன் அலஸ் போதைப்பொருள் உபயோகிக்கும் மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தினார். பல்கலைக்கழக வளாகங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, மாணவர் விடுதிகளுக்கு அருகில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

Exit mobile version