Home Hit ‘MV Eurosun’ கப்பல் விசேட கண்காணிப்பில்

‘MV Eurosun’ கப்பல் விசேட கண்காணிப்பில்

141
0

அபுதாபியில் இருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்றபோது ஹம்பாந்தோட்டை கடல் பரப்பில் சின்ன ராவணா வெளிச்சவீட்டுக்கு அருகில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்பதற்கு இன்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிசித்துள்ளது.

லைபிரிய நாட்டுக்கு சொந்தமான குறித்த கப்பல் சின்ன ராவணா கடற்பகுதியில் கற்பாறை ஒன்றில் மோதி தரை தட்டியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

‘MV Eurosun’ கப்பல் விசேட கண்காணிப்பில்என்ற குறித்த கப்பலை கண்காணிக்க கடற்படையினருடன் விமானப்படையினரும் இணைந்துள்ளதாக கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

கப்பல் விபத்துக்குள்ள போது 33,000 க்கும் அதிகமான மெற்றிக்தொன் அளவான பொருட்களும், 720 மெற்றிக்தொன் எரிப்பொருளும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, கப்பலில் 18 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here