சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களில் இருவர் கேகாலை தம்மிக்க பண்டாரவின் பாணியை அருந்தியவர்கள் என்பது விசேட அம்சமாகும்.
இதேவேளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முறையாக மருந்தை உட்கொள்ளவில்லை என தம்மிக்க பண்டாரவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இப்படியிருக்கையில், தம்மிக்க பாணி தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ச்சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இன்று (24) காலை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பேராசிரியர் இதனை தெரிவித்துள்ளார்.
“தம்மிக்க பண்டார தயாரித்த பாணி குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். அதேபோல் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக தயாரிப்பான எஸ்ட்ரா செனெகா தடுப்பூசி முதன் முதலில் இலங்கைக்கு கிடைக்கும்.” என்றார்.