Home Corona “நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” – அமெரிக்க புதிய ஜனாதிபதி

“நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” – அமெரிக்க புதிய ஜனாதிபதி

1108
0

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் கார்பன் புகைகளால் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது.

இதனை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஐ.நா சபையின் முயற்சியால் பாரிஸ் ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டது.

இதில் முதலில் கையெழுத்திட்ட அமெரிக்கா பின்னர் விலகியது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று (20) பதவியேற்றுக் கொண்டார்.

இராணுவ மரியாதையுடன் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனையடுத்து வெள்ளைமாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் ஜோ பைடன் தனது பணிகளை ஆரம்பித்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணி நேரங்களில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான நிர்வாக நடவடிக்கைகளில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஜோ பைடன், ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்…

“நெருக்கடியை சந்திக்கும் இந்த தருணத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த பதவியேற்பு விழா அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை ஜனாதிபதி என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here