Home Hit IPL இல் சங்காவுக்கு உயரிய பதவி, மாலிங்க, உதான ஆகியோருக்கு வாய்ப்பில்லை

IPL இல் சங்காவுக்கு உயரிய பதவி, மாலிங்க, உதான ஆகியோருக்கு வாய்ப்பில்லை

100
0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கா இந்த முறை நடைபெறும் IPL தொடரில் ராஜஸ்தான் ரோயல் அணியின் விளையாட்டு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ரோயல் அணியின் உரிமையாளர்கள் இதனை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு இந்த முறை IPL போட்டிகளில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளளளது.

மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி உரிமையாளர்கள், மாலிங்கவை ஏல நிபந்தனைகளிலிருந்து விலக்கியுள்ளமையே இதற்கு காரணம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ராஜஸ்தான் ரோயல் பெங்களூர் அணிக்காக விளையாடிய இசுறு உதானவும் ஏல பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here