Home Business திறக்கப்பட்டது மெனிங் சந்தை

திறக்கப்பட்டது மெனிங் சந்தை

247
0

கொழும்பு புறக்கோட்டை மெனிங் காய்கறி சந்தை இன்று (07) முதல் மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக சில காலம் மூடப்பட்டிருந்த மெனிங் சந்தை மீண்டும் சில நிபந்தனைகளின் கீழ் திறக்கப்பட்டது.

இதற்கமைவாக கிருமி அழிப்பு தேவையின் காரணமாக மெனிங் சந்தை இதுவரைகாலமும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்படடிருந்தது.

இருப்பினும் இன்று அதிகாலை 4.00 மணி முதல் பி.ப 1.00 மணிவரை மெனிங் சந்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

மெனிங் காய்கறி சந்தை வியாபார சங்கத்தின் துணைத் தலைவர் நிமல் அத்தநாயக்க இதனை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here