Home Hit Google Code-in 2019 போட்டியில் சாதனை படைத்த யாழ் மாணவன்

Google Code-in 2019 போட்டியில் சாதனை படைத்த யாழ் மாணவன்

423
0

Google Code-in 2019  போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் நித்தியானந்தன் மாதவன் வெற்றியீட்டி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Google Code-in 2019 போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் நித்தியானந்தன் மாதவன் முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ். இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்விகற்கும் இந்த மாணவன் 76 நாடுகளைச் சேர்ந்த 3,566 மாணவர்களுடன் போட்டியில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

10ஆவது ஆண்டாக நடைபெற்ற Google Code-in போட்டிகளில் அப்பர்டியம் என்ற மென்பொருள் தொடர்பில் நித்தியானந்தன் மாதவனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

அப்பர்டியம் என்கின்ற மென்பொருளை மொழிபெயர்ப்பு கருவி மாதிரி google translate மாதிரி தான் இதுவும். அப்பர்டியம் சிறுபான்மை மொழிகளுக்காக முதன் முதலில் உருவாக்கப்பட்ட நிறுவனம். இதற்கு தான் நிழலாக்கம் செய்து கொடுத்தேன்.

தமிழ், ஆங்கில மொழி பெயர்ப்பு செய்துகொடுத்தேன். நிழலாக்க திறன்களை விருத்திசெய்ய பிழைகளை திருத்திக்கொள்ள வழியாக உள்ளது. என மாணவன் நித்தியானந்தன் மாதவன் குறிப்பிட்டுள்ளார்.

நித்தியானந்தனுடன் சமிந்து அமரசிங்க மற்றும் குமுதித கருணாரத்ன ஆகியோரும் வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் அடங்கியுள்ளனர்.

வெற்றியாளர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதத்தில் தமது பெற்றோர் அல்லது பொறுப்பாகவுள்ளவர்களுடன் கலிபோர்னியாவிலுள்ள கூகுள் தலைமையகத்திற்கான 4 நாட்கள் பயணம் கிட்டவுள்ளது.

(தகவல் – News1st)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here